பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட 48 ஊழியர்கள்! அதிரடியாக நீக்கிய சுந்தர் பிச்சை

Report Print Kabilan in நிறுவனம்

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒழுக்க கேடாக நடந்துகொண்ட 48 ஊழியர்களை நீக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கூகுள் நிறுவனத்தில், ஆண்ட்ராய்டு கிரியேட்டராக பணியாற்றியவர் ஆண்டி ரூபின்.

இவர் மோசமான நடத்தை காரணமாக வெளியேற்றப்பட்டதாகவும், அவருக்கு வெளியேறும்போது (Exit Package) 90 மில்லியன் டொலர் வழங்கப்பட்டதாகவும் சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

அத்துடன் பிற பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுக்களை கூகுள் மறைத்து விட்டதாகவும் குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் பாலியல் தொந்தரவு உட்பட ஒழுக்க கேடாக நடந்து கொண்ட 48 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இவர்களில் 13 பேர் மூத்த மேலாளர்கள் எனவும், இவர்களுக்கு Serverance Package வழங்கப்படவில்லை எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, குறித்த ஊழியர்களுக்கு இந்த தகவலை கூகுள் நிறுவனம் மின்னஞ்சலில் அனுப்பியுள்ளது. இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டால் முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், கூகுள் நிறுவன தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை பெயரில் அனுப்பப்பட்டுள்ள அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers