புத்தம் புதிய சேவைகளை அறிமுகம் செய்தது eBay நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

eBay நிறுவனமானது உலகின் மிகப் பிரம்மாண்டமான ஒன்லைன் ஸ்டோராக திகழ்கின்றது.

இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக மேலும் சில ஒன்லைன் சேவைகளை வழங்க முன்வந்துள்ளது.

இதன்படி வீட்டில் பொருட்களை இன்ஸ்டால் செய்தல் மற்றும் அசெம்பிளி செய்தல் போன்ற சேவைகளுக்காக பணியாளர்களை புக் செய்யும் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

இதற்காக மூன்று நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது.

Handy, InstallerNet, மற்றும் Porch ஆகியனவே குறித்த நிறுவனங்கள் ஆகும்.

இந்த நிறுவனங்களுடன் இணைந்து தொலைக்காட்சிகளை வீட்டில் நிறுவிக்கொடுத்தல், தளபாடங்கள், வாகனங்கள் என்பவற்றினை ஒருங்கிணைத்தல் போன்ற சேவைகளை வழங்கவுள்ளது.

இந்த தகவலை eBay நிறுவனத்தின் துணை முதல்வரான Merchandising Alyssa தெரிவித்துள்ளார்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்