தரவுப்பரிமாற்ற வேகத்தை அதிகரிக்கும் முகமாக ஒன்றிற்கு மேற்பட்ட டேட்டா சென்டர்களை முன்னணி இணைய நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன.
இதேபோன்று கூகுள் நிறுவனமும் மற்றுமொரு புதிய டேட்டா சென்டரை டென்மார்க்கின் ப்ரெட்றிக்கா பகுதியில் அமைக்கவுள்ளது.
இதற்காக 690 மில்லியன் டொலர்கள் செலவு செய்யப்படவுள்ளது.
தற்போது ஆரம்பிக்கப்படவுள்ள இத் திட்டம் 2021 ஆம் ஆண்டில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த டேட்டா சென்டரில் 150 தொடக்கம் 200 வரையான பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பேஸ்புக் நிறுவனம் தனது டேட்டா சென்டர் ஒன்றினை டென்மார்க்கில் உருவாக்கியுள்ள அதேவேளை ஆப்பிள் நிறுவனமும் விரைவில் இங்கு ஒரு டேட்டா சென்டரை அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.