ஆப்பிள் நிறுவனத்தை மீண்டும் நீதிமன்றத்துக்கு செல்ல வைத்த வாடிக்கையாளர்கள்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

முன்னணி இணைய மற்றும் இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்கள் அண்மைக் காலாக அடிக்கடி நீதிமன்றம் செல்ல நேரிடுகின்றது.

இதற்கு பயனர்கள் பாதிக்கப்படுகின்றமையே பிரதான காரணமாக விளங்குகின்றது.

இதனடிப்படையில் தற்போது ஆப்பிள் நிறுவனம் மீண்டும் நீதிமன்றம் வரை செல்ல நேர்ந்துள்ளது.

ஆப்பிள் சாதனங்களுக்காக ஆப்ஸ் ஸ்டோரில் தரப்படும் கட்டணம் செலுத்த வேண்டிய அப்பிளிக்கேஷன்களுக்கு 30 சதவீதம் வரை அதிகமாக அறவீடு செய்யப்படுவதாகவும், இவை ஆப்பிள் நிறுவனத்திற்கு கொமிஷனாக செல்வதாகவும் வடிக்கையாளர்கள் முறையீடு செய்துள்ளனர்.

இதன் காரணமாகவே ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டிற்கு பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த ஆப்பிள் நிறுவனம் அப்பிளிக்கேஷன்களுக்கான விலையை அதனை டெவெலொப் செய்பவர்களே தீர்மானிப்பதாகவும், அப்பிளிக்கேஷன்களை தரவிறக்குவதில் பயனர்களுக்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் எந்தவிதமான இடைத் தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை இவ் வழக்கின்போதான தீர்ப்பு ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக காணப்படுமாயின் அது கூகுள், மைக்ரேசொப்ட் போன்று மற்றைய தொழில்நுட்ப நிறுவனங்களையும் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers