முதலாம் இடத்தை இழந்தது பேஸ்புக் நிறுவனம்: எதில் தெரியுமா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
101Shares

அமெரிக்காவில் காணப்படும் நிறுவனங்களுள் பணிபுரிவதற்கு சிறந்த இடங்களின் வரிசையில் தனது முதல் இடத்தினை பேஸ்புக் இழந்துள்ளது.

Glassdoor எனப்படும் பிரபல வேலைவாய்ப்பு இணையத்தளத்தின் வரிசைப்படுத்தலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி 100 நிறுவனங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் 2018 ஆம் ஆண்டில் முதல் இடத்தில் காணப்பட்ட பேஸ்புக் நிறுவனமானது 2019 ஆம் ஆண்டிற்கான தரவரிசைப்படுத்தலில் 7 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த 100 நிறுவனங்களுள் 29 தொழில்நுட்ப நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

முதலிடத்தில் Bain & Company எனும் நிறுவனம் காணப்படுகின்ற அதேவேளை LinkedIn 6 வது இடத்திலும், கூகுள் 8 வது இடத்திலும், மைக்ரோசொப்ட் 34 வது இடத்திலிலும், ஆப்பிள் நிறுவனம் 71 வது இடத்திலும், HP நிறுவனம் 87 வது இடத்திலும் காணப்படுகின்றன.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்