நாசா உட்பட அமெரிக்காவின் பல நிறுவனங்களில் சீன ஹேக்கர்கள் கைவரிசை

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

சீனாவை சேர்ந்த இரு தனி நபர்கள் அமெரிக்காவின் பல்வேறு நிறுவனங்களில் கணினிகளில் புகுந்து தகவல்களை திருடியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுமார் 12 வருட காலமாக இவர்கள் தமது கைவரிசையை தொடர்ந்துள்ளதாக அமெரிக்க நீதித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

நாசா விண்வெளி ஆய்வு மையம், ஐபிஎம் நிறுவனம் உட்பட சுமார் 45 நிறுவனங்களில் தகவல்களை இவர்கள் ஹேக் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையில் வியாபாரப்போட்டி உச்ச நிலையை அடைந்துள்ள நிலையில் இச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் சீனாவின் முன்னணி இலத்திரனியல் உற்பத்தி நிறுவனமான ஹுவாவியின் தலைமை நிதி அதிகாரி அண்மையில் கனடாவில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers