பெண்கள் அணியும் காலணி விநாயகரின் படம் : சர்ச்சையில் சிக்கி பிரபல ஆடை நிறுவனம்

Report Print Kavitha in நிறுவனம்

ஹவாயை சேர்ந்த பிரபல ஆடை நிறுவனம் ஒன்று இந்து கடவுளான விநாயகரின் படம் பதித்த காலணிகளை மற்று பெண்களின் ஆடைகளை விற்பனைக்கு வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளது.

ஹவாயை சேர்ந்த ''மயூ வோக்'' என்னு பிரபல ஷு நிறுவனம் விநாயகரை அவமதிக்கும் வகையில் நிறுவனம் ஷுக்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் பெண்கள் அணியும் ஷுக்கள் மற்றும் செருப்புகளில் இந்த படங்களை அவர்கள் பதித்து 3000 ரூபாயில் இருந்து 6000 ரூபாய் வரை இருக்கும் என்று நிர்ணயம் செய்யப்பட்டு விநாயகரின் படம் பதித்த காலணிகளை வெளியிட்டுள்ளது.

இதேவேளை பெண்களின் லெக்கிங்ஸ் போன்ற ஆடைகளிலும் விநாயகர் உருவம் பதித்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

தற்போது இந்த புகைப்படங்கள் இணையம் முழுவது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் இதற்கு மயூ வோக் நிறுவனம் இதற்கு உடனடியாக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும், உடனடியாக தாங்கள் வெளியிட்ட ஷுக்களை திரும்ப பெற வேண்டும் என்று பலர் கருத்து வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers