ஒரே மாதத்தில் பல லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த பிரபல நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

இந்தியாவில் உள்ள பல பிரபல தொலைபேசி வலையமைப்பு நிறுவனங்களுள் வொடாபோன் நிறுவனமும் ஒன்றாகும்.

இந்நிறுவனம் எதிர்பாராத அளவிற்கு பாரிய அளவில் தனது வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சுமார் 6.52 மில்லியன் வாடிக்கையாளர்கள் வொடாபோன் வலையமைப்பை பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளனர்.

அதேபோன்று பாரதி எயார்டெல் நிறுவனம் 0.11 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.

முகேஷ் அம்பானியின் ஜியோ திட்டத்தில் தொடர்ந்தும் பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக ஜியோவின் பக்கம் அதிக வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்படுவதனால் மற்றைய வலையமைப்புக்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகின்றது.

இந்த தகவலை Cellular Operators Association of India (COAI) வெளியிட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers