வெற்றி பெற்றது Qualcomm: அடிபணிந்தது ஆப்பிள் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

காப்புரிமை பிரச்சினை தொடர்பில் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக Qualcomm நிறுவனமானது பல நாடுகளில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இவ் வழக்கில் தனது நியாயங்களை எடுத்துக்காட்டியுள்ள Qualcomm நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 ஆகியவற்றினை விற்பனை செய்வதற்கு தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

முதன் முதலாக இக் கோரிக்கை ஜேர்மனில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் குறித்த கைப்பேசிகளை விற்பனை செய்வதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இத் தடை உத்தரவை ஏற்றுக்கொண்ட ஆப்பிள் நிறுவனம் தற்போது ஜேர்மனியில் மேற்கண்ட இரு கைப்பேசிகளையும் விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்டோர்களில் இக் கைப்பேசிகளின் விற்பனையை நிறுத்தியுள்ள போதிலும், ஜேர்மனியில் சுமார் 4,300 வரையான மீள்விற்பனையாளர்கள் மற்றும் மொபைல் வலையமைப்பு நிறுவனங்கள் தொடர்ந்தும் விற்பனை செய்து வருகின்றன.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers