ஐபோன் உற்பத்தி தொடர்பில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

தற்போது உலகளவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு அதிக வரவேற்பு காணப்படுகின்றது.

இதனால் ஒவ்வொரு வருடமும் அதிகளவு ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்து அறிமுகம் செய்து வந்தது.

எனினும் முதன் முறையாக இந்த வருடம் அதிர்ச்சி முடிவு ஒன்றினை அந்நிறுவனம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி இவ் வருடம் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான முதலாம் காலாண்டுப் பகுதியில் ஐபோன்களின் உற்பத்தியினை 10 சதவீதத்தினால் ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குவால்கொம் நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் சில வகையான ஐபோன்களை விற்பனை செய்ய ஜேர்மனி உட்பட சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில்கொண்டே ஆப்பிள் நிறுவனம் இந்த அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers