யூடியூப் ஊடாக பல்வேறு வகையான வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இந்த தளத்தில் சில கொடூரமான காட்சிகள் இடம்பெறும் வீடியோக்கள் உட்பட மேலும் சில வகையான வீடியோக்களை பதிவேற்றம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மற்றுமொரு அதிரடி முடிவை யூடியூப் நிறுவனம் எடுத்துள்ளது.
அதாவது பல சென்சேசனல் வீடியோக்களை புரமோட் செய்வதை நிறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இவ்வாறான நடவடிக்கையினை பேஸ்புக் மற்றும் டுவிட்டர் நிறுவனங்கள் ஏற்கணவே எடுத்துள்ள நிலையில் தற்போது யூடியூப்பும் இந்த முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.