தற்போது 4G இணையத் தொழில்நுட்பம் பாவனையில் உள்ள நிலையில் 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைக்கும் முயற்சியில் பல நிறுவனங்கள் முனைப்புக்காட்டி வருகின்றன.
இவ்வருடம் சில நிறுவனங்கள் 5G தொழில்நுட்பங்கொண்ட கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளன.
இந்நிலையில் இத் தொழில்நுட்பத்தினைத் தாண்டி 6G இணையத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை LG நிறுவனம் வடிவமைத்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்கொரியாவின் Yuseong மாவட்டத்திலுள்ள ஆராய்ச்சி நிலையம் ஒன்றில் இப் புதிய தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.