பல பில்லியன் டொலர்களை செலவு செய்யும் கூகுள்: எதற்கு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

கூகுள் நிறுவனம் அமெரிக்காவில் மற்றும் சில மிகப்பெரிய டேட்டா சென்டர்களை உருவாக்கவுள்ளது.

இதற்காக 13 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.

இந்த தகவலை கூகுள் நிறுவனமே உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இத் திட்டத்தின்படி 14 மாநிலங்கள் டேட்டா சென்டர்கள் அமைக்கப்படவுள்ளன.

ஏற்கணவே 10 மாநிலங்களில் டேட்டா சென்டர்கள் காணப்படும் நிலையில் இப் புதிய டேட்டா சென்ர்களையும் சேர்த்து அமெரிக்காவில் மாத்திரம் 24 டேட்டா சென்டர்களை கூகுள் கொண்டுள்ளது.

இங்கு 100 சதவீதம் புதுப்பிக்கக்கூடிய சக்தி வளங்கள் பயன்படுத்தப்படவுள்ளதக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத் திட்டத்தின் ஊடாக உலகளவில் உள்ள பில்லியன் கணக்கான மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட உற்பத்திகளையும், சேவைகளையும் வழங்க முடியும் என கூகுள் தெரிவித்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்