30 நகரங்களில் 5G தொழில்நுட்பம்: அசத்தும் மொபைல் வலையமைப்பு நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

தற்போது காணப்படும் 4G மொபைல் வலையமைப்பினை விடவும் பன்மடங்கு வேகம் கூடிய தொழில்நுட்பமாக 5G வலையமைப்பு காணப்படுகின்றது.

இவ் வலையமைப்பினை இவ் வருட இறுதிக்குள் அறிமுகம் செய்வதற்கு பல நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவின் முன்னணி மொபைல் வலையமைப்பு சேவை வழங்கும் நிறுவனரான Verizon ஆனது 2019 ஆம் ஆண்டிற்குள் சுமார் 30 நகரங்களில் இப் புதிய வலையமைப்பு சேவையினை தனது வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த தகவலை Verizon நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி Hans Vestberg என்பவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதேவேளை இப் புதிய தொழில்நுட்பத்தில் செயற்படக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளும் இவ் வருடம் அறிமுகம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers