மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளை மோட்ரோலா நிறுவனம் எப்போது அறிமுகம் செய்கின்றது?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஸ்மார்ட் தொழில்நுட்பத்தினைக் கொண்டதும், மடிக்கக்கூடியதுமான கைப்பேசிகளை இவ் வருடத்தில் அறிமுகம் செய்வதற்கு பல நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன.

இந்நிறுவனங்களின் வரிசையில் தற்போது மோட்ரோலா நிறுவனமும் இணைந்துள்ளது.

இதன்படி எதிர்வரும் கோடை காலப் பகுதியில் குறித்த கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இக்கைப்பேசியின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இதேவேளை சாம்சுங்கின் Galaxy Fold கைப்பேசியானது எதிர்வரும் ஏப்ரல் 26 ஆம் திகதி அளவிலும், Mate X கைப்பேசியானது இவ் வருடத்தின் நடுப்பகுதியிலும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers