மே மாதம் 5G மொபைல் வலையமைப்பினை அறிமுகம் செய்யும் பிரபல நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

தற்போது உள்ள 4G தொழில்நுட்பத்தினை விடவும் வேகம் கூடிய 5G மொபைல் வலையமைப்பு தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்வதற்கு பல நிறுவனங்கள் தயாராகிவருகின்றன.

இவற்றில் அமெரிக்காவில் தொலைபேசி வலையமைப்பு சேவையை வழங்கும் பிரபல நிறுவனமான Sprint எதிர்வரும் மே மாதம் தனது 5G வலையமைப்பினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக Chicago, Atlanta, Dallas மற்றும் Kansas City போன்றவற்றில் இத் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இவற்றில் சில இடங்களில் 30 மைல்கள் சுற்றுவட்டத்திற்கு 5G சமிக்ஞை வழங்கப்படவுள்ளதுடன், சில இடங்களில் 230 மைல்களுக்கு வழங்கப்படவுள்ளது.

எவ்வாறெனினும் முதற்கட்டமாக மொத்தம் 1,000 மைல்கள் சுற்றுவட்டத்திற்கு இச் சமிக்ஞை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers