யூடியூப் நிறுவனம் எடுத்த அடுத்த அதிரடி நடவடிக்கை: இனி இதனை செய்ய முடியாதாம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

யூடியூப் நிறுவனம் அண்மைக்காலமாக தனது பயனர்களை பாதுகாக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த வரிசையில் தற்போது மற்றுமொரு அதிரடி தீர்மானத்தினை எடுத்துள்ளது.

அதாவது குழந்தைகளுக்கான யூடியூப் வீடியோக்களில் எவரும் Comment செய்ய முடியாதவாறு மாற்றியமைத்துள்ளது.

குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை பாதுகாக்கும் முகமாகவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே எதிர்காலத்தில் 18 வயதிற்கு கீழ்ப்பட்டவர்களை இலக்காகக் கொண்ட வீடியோக்களில் இவ்வாறு Comment செய்ய முடியாது.

சிறுவர்களை இலக்கு வைத்து துஷ்பிரோயக நடவடிக்கைகள் சமூகவலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றமை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers