பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தை கொள்வனவு செய்கின்றது ஆப்பிள்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

தொழில்நுட்ப உலகில் தவிர்க்க முடியாத ஒரு நிறுவனமாக ஆப்பிள் நிறுவனம் விஸ்வரூபமெடுத்துள்ளது.

இந்த நிறுவனமானது கணினி, கைப்பேசி வடிவமைப்பினை தாண்டில் பல்வேறு முயற்சிகளில் காலடி பதித்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் Laserlike எனும் கணினி புரோகிராமிங் நிறுவனத்தினை கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றது.

கூகுளி நிறுவனத்தில் பணியாற்றிய மூவரால் Laserlike எனும் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த நிறுவனம் தேடல் அப்பிளிக்கேஷன் ஒன்றினை உருவாக்கியுள்ள நிலையிலேயே தற்போது ஆப்பிள் தன்வசப்படுத்த முனைந்து வருகின்றது.

குறித்த அப்பிளிக்கேஷன் ஆனது பயனர்களுக்கு செய்திகள், வீடியோக்கள் உட்பட மேலும் பல தகவல்களை தேடித் தரக்கூடிய வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் Laserlike நிறுவனத்தை கொள்வனவு செய்வதற்கு ஆப்பிள் நிறுவனம் முதலீடு செய்யும் தொகை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்