புதிய மைல்கல்லை எட்டியது ரிலையன்ஸ் ஜியோ

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ரிலையன்ஸ் நிறுவனமானது கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ஜியோ எனப்படும் சேவை ஒன்றினை அறிமுகம் செய்திருந்தது.

இச் சேவையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தற்போது 300 மில்லியனை எட்டி சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி குறித்த மைல்கல்லை ஜியோ எட்டியுள்ள நிலையில் தற்போதே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இச் சேவையின் ஊடாக குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா மற்றும் அதிக வேகம் என்பன பயனர்களுக்காக வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை அறிமுகம் செய்யப்பட்டு 170 நாட்களில் 100 மில்லியன் பயனர்களை எட்டி குறுகிய காலத்தில் 100 மில்லியன் பயனர்களை எட்டிய உலகின் முதலாவது நெட்வேர்க் எனும் சாதனையையும் ஜியோ தனதாக்கியிருந்தது.

இப்படியிருக்கையில் பாரதி எயார்டெல் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 19 வருடங்களின் பின்னரே 300 மில்லியன் பயனர்களை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்