வழக்கிற்காக மிகப்பெரிய தொகையை செலவிட்ட ஆப்பிள் நிறுவனம்! வெளியான விபரம்

Report Print Kabilan in நிறுவனம்

குவால்காம் நிறுவனத்துடன் நடைபெற்ற பிரச்சனையை சுமூகமாக தீர்க்க, ஆப்பிள் நிறுவனம் மிகப்பெரிய தொகையை செலவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் ஆப்பிள் மற்றும் குவால்காம் ஆகிய இருநிறுவனங்களும் வழக்குகளை எதிர்கொண்டிருந்ததால், ஆப்பிளின் 5ஜி ஐபோன் வெளியீடு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டது.

இதனை தவிர்க்கும் வகையில், ஆப்பிள் நிறுவனம் உயர் தொகையை செலவிட்டு சட்ட பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடிவு செய்ததாக கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இருநிறுவனங்களுக்கும் இடையே நடைபெற்ற வழக்குகளை திரும்பப் பெற, குவால்காமிற்கு 34,700 கோடி முதல் 41,600 கோடி வரையிலான தொகையை ஆப்பிள் நிறுவனம் வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஒரு ஐபோனிற்கு 8 முதல் 9 டொலர்கள் வரை இழப்பீடாக வழங்க ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து ஆப்பிள் மற்றும் குவால்காம் இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை.

சட்ட பிரச்சனைகளுக்கான தீர்வு நடவடிக்கையின் படி, ஆப்பிள் நிறுவனம் குவால்காமிற்கு பணம் கொடுக்க வேண்டும். இரு நிறுவனங்களிடையே ஆறு ஆண்டுகளுக்கு வியாபாரம் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தம் ஏப்ரல் 1, 2019 முதல் அமலுக்கு வந்த நிலையில், இதனை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு கூடுதலாக நீட்டிக்க முடியும். மேலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு பல ஆண்டுகளுக்கு சிப்செட்களை குவால்காம் விநியோகம் செய்ய இருக்கிறது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers