இலவசமான ஒரு நாள் டெலிவரி தொடர்பில் பரிசோதிக்கும் அமேஷான் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஒன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களை சிப்பிங் ஊடாக பயனர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்கு அமேஷான் நிறுவனம் பணம் அறவிட்டு வருகின்றமை தெரிந்ததே.

எனினும் அமேஷானின் ப்ரைம் மெம்பர் எனப்படும் பணம் செலுத்தி அங்கத்துவம் பெற்றவர்களுக்கு இரண்டு நாள்களில் கிடைக்கக்கூடிய சிப்பிங்கினை இலவசமாக வழங்குவதாக அறிவித்திருந்தது.

இப்படியிருக்கையில் தற்போது குறித்த அங்கத்துவம் பெற்றவர்களுக்கு ஒரு நாளில் இலவச சிப்பிங் சேவையை வழங்குவதற்கான முயற்சிகளிலும் அமேஷான் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை அமேஷான் நிறுவனத்தின் தலைமை கணக்கு அலுவலர் ப்ரைன் ஒல்சாவ்ஸ்கை தெரிவித்துள்ளார்.

இப் புதிய சேவைய பெறுவதற்கு ப்ரைம் மெம்பர்கள் 35 டொலர்களுக்கு மேற்பட்ட பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers