ஹுவாவி நிறுவனத்திற்கு ஆறுதல் அளிக்கும் தகவலை வெளியிட்ட பிரபல நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

வர்த்தகப்போட்டியின் காரணமாக ஹுவாவி நிறுவனத்திற்கு பல்வேறு நெருக்கடிகளை அமெரிக்கா கொடுத்து வருகின்றது.

இதனையடுத்து அமெரிக்க முன்னணி நிறுவனங்களும் ஹுவாவிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.

இந்நிலையில் தாய்வானை சேர்ந்த முன்னணி குறைகடத்தி தயாரிப்பு நிறுவனம் (Taiwan Semiconductor Manufacturing Company (TSMC)) ஹுவாவி நிறுவனத்திற்கு சற்று ஆறுதலான செய்தியை வழங்கியுள்ளது.

அதாவது ஹுவாவி நிறுவனத்திற்கு தேவையான சிப்களை தாம் தொடர்ந்தும் தயாரித்து வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஹுவாவி நிறுவனத்துடன் தொடர்புகளைக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு பல விதிகளை அமெரிக்கா அறிமுகம் செய்துள்ளது.

இதன் காரணமாக குறித்த நிறுவனத்துடனான தொடர்புகளை பல்வேறு நிறுவனங்களும் துண்டித்து வருகின்றன.

எனினும் சிப்களை தயாரித்து வழங்குதல் குறித்த விதிகளுக்குள் அடங்காத காரணத்தினால் தொடர்ந்தும் ஹுவாவி நிறுவனத்திற்கு தேவையான சிப்களை Taiwan Semiconductor Manufacturing Company (TSMC) தயாரித்து வழங்கவுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers