அதி வேகம் கொண்ட 5G வலையமைப்பானது வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட பின்னர் தற்போது பல நாடுகளிலும் கடுகதியில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.
ஐரோப்பிய நாடுகளில் இவ் வலையமைப்பினை நிறுவுவதில் வெவ்வேறு நிறுவனங்கள் முனைப்புக்காட்டி வருகின்றன.
இந்நிலையில் தற்போது Vodafone நிறுவனம் ஐக்கிய இராச்சியத்தின் 7 நகரங்களில் 5G வலையமைப்பினை அறிமுகம் செய்துள்ளது.
இவற்றில் கார்டிவ், லண்டன், மான்ஸ்செஸ்டர் மற்றும் க்ளாஸ்கௌ என்பனவும் அடங்கும்
இதேவேளை EE நிறுவனமும் 5G வலையமைப்பினை 6 நகரங்களில் கடந்த வாரம் அறிமுகம் செய்திருந்தது.
5G வலையமைப்பானது ஏற்கனவே பாவனையில் உள்ள 4G வலையமைப்பினை விடவும் 100 மடங்கு வேகம் கூடியது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.