பயனர்களுக்கு அதிரடிச் சலுகையை வழங்கிய மொபைல் வலையமைப்பு நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

இந்தியாவில் பல்வேறு மொபைல் வலையமைப்பு நிறுவனங்கள் காணப்படுகின்றன.

இவற்றில் BSNL ஆனது முறையான வாடிக்கையாளர் சேவையின்மை, தொழில்நுட்ப மாற்றங்களுக்கு உட்படாமை போன்ற பல்வேறு காரணங்களினால் பயனர்களின் எண்ணிக்கையை இழந்து வந்துள்ளது.

இந்நிலையில் பயனர் எண்ணிக்கையை அதிகரிக்கும் முகமாக அதிரடி திட்டம் ஒன்றினை தற்போது அறிவித்துள்ளது.

இதன்படி 96 இந்திய ரூபாய்களை ரீலோட் செய்வதன் மூலம் வரையறையற்ற (Unlimited) தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

அத்துடன் நாள் ஒன்றிற்கு 100 SMS அனுப்பவும் முடியும்.

இச் சலுகைககள் ரீலோட் செய்யப்பட்ட நாளிலிருந்து 21 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்