தனது நிறுவனம் தொடர்பாக வெளியான தகவலை உறுதிப்படுத்தியது ஆப்பிள்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

சில தினங்களுக்கு முன்னர் ஆப்பிள் நிறுவனமானது பிரபல சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெலினை வாங்கவுள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது.

இந்த தகவலை தற்போது ஆப்பிள் நிறுவனம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இன்டெல் நிறுவனமானது மொபைல் சாதனங்களுக்கு மாத்திரமன்றி கணினி சாதனங்களுக்கான சிப்களையும் வடிவமைத்து தருகின்ற ஒரு நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் உலக அளவில் பிரபல்யமடைந்த நிறுவனமாக இருக்கின்றது.

இப்படியான நிலையிலேயே மொபைல் சாதனங்கள் உட்பட கணினி சாதனங்களை வடிவமைத்து அறிமுகம் செய்யும் ஆப்பிள் நிறுவனம் கொள்வனவு செய்கின்றது.

இதற்காக 1 பில்லியன் டொலர்களை வழங்கவுள்ள ஆப்பிள் நிறுவனம் இன்டெல் நிறுவனத்தின் உரிமம் மற்றும் 2,200 பணியாளர்களையும் தன்வசப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்