எதிர்வரும் நவம்பர் மாதம் 5G வலையமைப்பு தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்யும் பிரபல நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

தற்போது உலக அளவில் சில மொபைல் வலையமைப்பு சேவையை வழங்கிவரும் நிறுவனங்கள் 5G வலையமைப்பு சேவையினை பயனர்களுக்கு வழங்க ஆரம்பித்துள்ளன.

இவ்வாறான நிலையில் பிரித்தானியாவின் Sky Mobile நிறுவனமும் எதிர்வரும் நவம்பர் மாதம் தனது பயனர்களுக்காக 5G சேவையினை அறிமுகம் செய்கின்றது.

முதலில் 5 நகரங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ள இச் சேவை பின்னர் 20 நகரங்களுக்கு விஸ்தரிக்கப்படவுள்ளது.

இச் சேவையினை Huawei Mate 20 X கைப்பேசி உட்பட 5G தொழில்நுட்பம் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து வகையான கைப்பேசிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் 1GB தரவினை மாதாமாதம் 42 பவுண்ட்ஸ் என்ற பெறுமதியில் அல்லது 8GB தரவினை 46 பவுண்ட்ஸ் என்ற பெறுமதியில் செலுத்தி பயன்படுத்த முடியும்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers