2019 ஆம் ஆண்டிற்கான புகைப்பட விருதுகளை வென்றவர்களின் விபரங்களை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
35Shares

ஆப்பிள் நிறுவனமானது iPhone Photography Award எனும் போட்டியினை இவ் வருடம் நடாத்தியிருந்தது.

இதன்படி iPhone SE முதல் iPhone XS வரை ஏதாவது ஒரு ஐபோனை பயன்படுத்தி புகைப்படம் எடுத்து அதனை ஆப்பிள் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதற்காக பல்வேறு Category அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இப் போட்டியில் வெற்றிபெற்றவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் கிராண்ட் பரிசினை இத்தாலியை சேர்ந்த கேப்ரில்லா சிக்ளியானோ என்பவர் தட்டிச் சென்றுள்ளார்.

இரண்டாவது பரிசினை ரஷ்யாவை சேர்ந்த ஜுலியா இல்ப்ரேவா பெற்றுள்ளார்.

இரண்டு இந்தியர்களும் இப் போட்டியில் கலந்துகொண்டு பரிசில்களை வென்றுள்ளனர்.

இதில் மகாராஸ்ராவை சேர்ந்த டிம்பி பாலோட்டியா சீரிஸ் கட்டகரியில் இரண்டாம் பரிசினையும், கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரீகுமார் கிருஷ்ணன் சன்செட் கட்டகரியில் முதலாம் பரிசினையும் பெற்றுள்ளனர்.

தவிர மேலும் வெற்றி பெற்றவர்களுள் 18 நாடுகளை சேர்ந்தவர்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்