தனது புதிய இயங்குதளம் தொடர்பில் அறிவித்தலை வெளியிட்டது ஹுவாவி

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஹுவாவி நிறுவனம் ஆனது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்திற்கு மாற்றாக தனது சாதனங்களில் Harmony எனும் தனது சொந்த இயங்குதளத்தினை பயன்படுத்தவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் சில வாரங்களுக்கு முன்னர் இவ் இயங்குதளமானது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கொண்ட தொழிற்சாலை சாதனங்களில் பயன்படுத்தவுள்ளதாக மற்றுமொரு தகவல் வெளியானது.

இப்படியிருக்கையில் தற்போது ஹுவாவி நிறுவனமே உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதன்படி அன்ரோயிட் இயங்குதளத்திற்கு மாற்றாகவே Harmony இயங்குதளம் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதத்தில் அமெரிக்கா தனது வியாபார கறுப்பு பட்டியலில் ஹுவாவி நிறுவனத்தினை சேர்த்ததை அடுத்து பல அமெரிக்க நிறுவனங்கள் ஹுவாவியுடனான வியாபார உறவை துண்டித்திருந்தன.

அதேபோன்று கூகுள் நிறுவனமும் ஹுவாவி மொபைல் சாதனங்களுக்கான அன்ரோயிட் அப்டேட்டினையும் நிறுத்தியிருந்தது.

இதனை அடுத்தே தனது சொந்த இயங்குதளத்தினை உருவாக்கும் முயற்சியில் ஹுவாவி களமிறங்கியிருந்தது.

இவ் இயங்குதளமானது முதலில் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் கடிகாரங்கள் என்பனவற்றில் அன்ரோயிட் இயங்குதளத்திற்கு பதிலாக பிரதியீடு செய்யப்படவுள்ளன.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்