புதிய மைல்கல்லை எட்டியது அவுஸ்திரேலியாவிற்கான இன்போசிஸ் கிளை

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றாக இன்போசிஸ் காணப்படுகின்றது.

இந்த நிறுவனத்தின் 85 சதவீதமான வருமானமானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஈட்டப்படுகின்றது.

எனினும் இந்த நிறுவனம் தனது கிளை ஒன்றினை அவுஸ்திரேலியாவிலும் நிறுவியுள்ளது.

இக் கிளை நிறுவனத்தின் வருமானம் 1 பில்லியன் டொலர்களை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது.

இந்த தகவலை அந்நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான சாலில் பரேக் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்காவிலிருந்து 61.65 சதவீத வருமானம் கிடைக்கப்பெறுவதாகவும், இது 11.8 பில்லியனாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று ஐரோப்பிய நாடுகளில் இருந்து 23.6 சதவீத வருமானம் கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers