ஐக்கிய இராச்சியத்தில் மொபைல் வலையமைப்பு சேவையை வழங்கிவரும் பிரபல நிறுவனங்களுள் ஒன்றாக Three காணப்படுகின்றது.
இந்நிறுவனம் தற்போது லண்டனில் தனது 5G வலையமைப்பு சேவையினை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி மாதாந்தம் 35 பவுண்ட்கள் எனும் கட்டணத்திற்கு அமைவாக 12 மாதங்கள் எனும் ஒப்பந்தத்தின் கீழ் இச் சேவையினை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
குறித்த நிறுவனத்தினால் இச் சேவை முதல் தடவையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரே ஒரு திட்டத்தினை மாத்திரமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.
எனும் வரையறையற்ற இணையப் பாவனையை இதனூடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதனை தொடர்ந்து படிப்படியாக ஏனைய நகரங்களுக்கும் இச் சேவை விஸ்தரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.