ஹுவாவி நிறுவனம் தடை செய்யப்படுவதை மேலும் பிற்போட்டது அமெரிக்கா

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

கடந்த மே மாதம் சீனாவை சேர்ந்த ஹுவாவி நிறுவனத்தை அமெரிக்கா தனது வியாபாரக் கறுப்பு பட்டியலில் சேர்த்திருந்தது.

இந்நிறுவனத்தை முற்றாக அமெரிக்காவில் தடை செய்வதே நோக்கமாக இருந்தது.

இதன்படி ஆகஸ்ட் 19 ஆம் திகதி முதல் இந்த தடை அமுலுக்கு வந்திருக்க வேண்டும்.

எனினும் 90 நாட்களால் இந்த தடை பிற்போடப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் நொவெம்பர் மாதம் 19 ஆம் திகதி குறித்த நிறுவனம் அமெரிக்காவில் முற்றாக தடை செய்யப்படலாம்.

இந்த நீடிக்கப்பட்ட காலத்திற்கான தற்காலிக அனுமதிப்பத்திரத்தினை ஹுவாவி நிறுவனத்திற்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.

எவ்வாறெனினும் ஹுவாவி ஸ்மார்ட் கைப்பேசிகளை அமெரிக்காவில் விற்பனை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்