ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் பிரபல பணியாளரை தனவசப்படுத்தும் மைக்ரோசொப்ட்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஆப்பிள் நிறுவனத்தின் Apple Siri தொழில்நுட்பத்தில் பணியாற்றிய Bill Stasior என்பவரை மைக்ரோசொப்ட் நிறுவனம் பணிக்கு அமர்த்தவுள்ளது.

தமது நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் பணியாற்றும் குழுவிற்கு தலைமை தாங்குவதற்காகவே அவரை தன் பக்கம் ஈர்த்துள்ளது மைக்ரோசொப்ட்.

இவர் ஏற்கணவே ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விலகியிருந்த நிலையில் இந்த மாதத்திலிருந்து மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு Cortana எனப்படும் குரல் வழி கட்டளையினை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை மேம்படுத்துவதில் தனது ஒத்துழைப்பினை வழங்கவுள்ளார்.

அமேஷானின் அலெக்ஸ்சா, கூகுள் அசிஸ்டன்ட் என்பவற்றிற்கு இணையாக Cortana சேவையினை கொண்டுவருவதே மைக்ரோசொப்ட்டின் இலக்காகும்.

இதனை சாத்தியப்படுத்துவதற்காகவே Bill Stasior தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்