ஹுவாவி நிறுவனம் அறிமுகம் செய்யும் அதிக வினைத்திறன் கொண்ட புரோசசர்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

அமெரிக்காவின் வர்த்தக கறுப்புப் பட்டியலில் இடம்பெற்ற போதிலும் சற்றும் மனம் தளராமல் தொழில்நுட்ப உலகில் வீறுநடைபோட்டு வருகின்றது ஹுவாவி நிறுவனம்

இந்நிறுவனம் தற்போது அதிவினைத்திறன் வாய்ந்த மொபைல் புரோசசர் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kirin 990 எனும் குறித்த புரோசசர் ஆனது 5G தொழில்நுட்பத்திற்கு இசைவாக்கம் உடையதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி பெர்லினில் இடம்பெறவுள்ள IFA 2019 நிகழ்வில் அறிமுகம் செய்யவுள்ளது.

ஹுவாவி நிறுவனம் ஏற்கனவே Kirin 980 எனும் புரோசசரை அறிமுகம் செய்திருந்தது.

இதற்கு சிறந்த வரவேற்பு காணப்படும் நிலையில் புதிய புரோசசருக்கும் ஸ்மார்ட் கைப்பேசி உலகில் வரவேற்பு காணப்படும் என நம்பப்படுகின்றது.

இதேவேளை குறித்த புரோசசர் ஹுவாவி நிறுவனத்தின் Mate தொடர் ஸ்மார்ட் கைப்பேசிகளில் உள்ளடக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்