புதிய அத்தியாயத்தை தொடங்கும் பிரபல மின் வணிக நிறுவனமான Alibaba

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

இன்று உலகின் முன்னணி மின் வணிக நிறுவனமாக Alibaba விளங்கிவருகின்றது.

இந்நிறுவனத்தை உருவாக்கியவர் Jack Ma என்பவராவார்.

1999 ஆம் ஆண்டு அலிபாபா நிறுவனம் உருவாக்கப்பட்டதிலிருந்து ஜக் மா அவர்களே நிர்வாகத் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.

இவரின் அற்புதமான திட்டமிடல்கள் காரணமாகவே அலிபாபா நிறுவனம் முன்னணி மின் வணிக நிறுவனங்களுள் ஒன்றாக உயர்ந்தது.

இந்நிலையில் அவர்கள் தனது வெற்றிப் பயணத்திற்கு ஓய்வு கொடுத்துள்ளார்.

அதாவது அலிபாபா நிறுவனத்தினை நிர்வகிப்பதிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இதன் காரணமாக இன்று முதல் டேனியல் ஷாங் என்பவரே ஜக் மாவின் இடத்தில் நிர்வாகத் தலைவராக செயற்படவுள்ளார்.

இதேவேளை அலிபாபா நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 480 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 38.6 பில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்களை கொண்ட ஜக் மா அவர்கள் சீனாவின் முதலாவது பணக்காரர் எனும் பெருமையையும் தனதாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்