தனது 5G வலையமைப்பு சேவைவை விஸ்தரிக்கும் பிரபல நிறுவனம்: எங்கு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஐரோப்பிய நாடுகளில் மொபைல் வலையமைப்பு சேவையினை வழங்கிவரும் பிரபல நிறுவனமான Vodafone ஏற்கனவே சில நகரங்களில் 5G வலையமைப்பு சேவையையும் அறிமுகம் செய்துள்ளமை தெரிந்ததே.

இந்நிலையில் தற்போது ஜேர்மனின் மேலும் சில நகரங்களில் தனது 5G வலையமைப்பு சேவையினை Vodafone நிறுவனம் விஸ்தரித்துள்ளது.

இதன்படி Berlin, Bremen, Dresden, Darmstadt, Leipzig, Duisburg மற்றும் Frankfurt ஆகிய நகரங்களில் உள்ள Vodafone வாடிக்கையாளர்களும் 5G வலையமைப்பு சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தற்போது மேற்கண்ட நகரங்கள் உள்ளடங்கலாக மொத்தம் 62 நகரங்களில் 5G சேவையினை Vodafone வழங்கிவருகின்றது.

அத்துடன் 4G வலையமைப்பு சேவைக்கு அளவிடப்பட்ட கட்டணமே 5G வலையமைப்பு சேவைக்கும் Vodafone நிறுவனம் அறவிடுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

4G வலையமைப்பினை விடவும் 10 மடங்கு வேகம் கொண்ட இந்த 5G வலையமைப்பின் Hotspot சேவைகள் ஸ்பெயின், ஜேர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் Vodafone நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன் சுற்றுலாப் பயணிகளிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்