கடும் வீழ்ச்சியை சந்திக்கும் அம்பானி ..... ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் விற்பனைக்கு

Report Print Abisha in நிறுவனம்

ரிலையன்ஸ் கேபிட்டல் நிறுவன பங்குகளை விற்க தொழிலதிபர் அனில் அம்பானி முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அனில் திருபாய் அம்பானி குழும நிறுவனம் கடனில் தத்தளித்து வருகிறது. இதனால் அனில் அம்பானி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

தொடர்ந்து அவர் கடன் நெருக்கடியில் தத்தளிப்பதால் 15ஆயிரம் கோடி கடனை வரும் மார்ச் மாதத்திற்குள் திருப்பி செலுத்த அவர் முடியு செய்துள்ளார்.

இந்த குழுமத்திற்கு ஒரு லட்சத்தி 70ஆயிரம் கோடி கடன்கள் இருந்தன. அதில் முக்கிய சொத்துக்கள் விற்று ஒரளவு கடன் திருப்பி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், ரிலையன்ஸ் கேபிட்டலைச் சேர்ந்த ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் மற்றும் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனங்களை, டிசம்பர் மாதத்துக்குள் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றிய தகவல்கள் வெளிவந்ததுமே, ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் பங்கு விலை கடும் வீழ்ச்சியடைந்தது.

அவரது சகோதரர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 8வது முறையாக இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்