சீனாவிற்குள் காலடி பதிக்கும் பேபால் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

டிஜிட்டல் பணப் பரிமாற்ற சேவையினை உலகளவில் வழங்கிவரும் பேபால் நிறுவனம் தற்போது சீனாவிற்குள் காலடி பதிக்க முனைப்புக் காட்டிவருகின்றது.

இதற்கான அனுமதியையும் அந்நிறுவனம் பெற்றுள்ளது.

இதன்படி Gopay நிறுவனத்துடன் இணைந்து டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவையினை வழங்க முடிவு செய்துள்ளது.

இதற்காக Gopay நிறுவனம் தனது 70 சதவீத பங்குகளை பேபால் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

இந்த தகவலை நேற்றைய தினம் இரு நிறுவனங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

இதேவேளை வெளிநாட்டு மூன்றாம் தரப்பு டஜிட்டல் நிறுவனங்களுக்கு உள்நாட்டில் அனுமதி வழங்கப்படவுள்ளதாக இவ் வருட ஆரம்பத்தில் சீன மத்தியவங்கி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்