பயனர்களின் தரவுகள் கசிவு: பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக அபராதம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஏறத்தாழ இரண்டு பில்லியன் வரையிலான பயனர்களைக் கொண்ட முன்னணி சமூகவலைத்தளமாக பேஸ்புக் விளங்குகின்றது.

இத் தளத்திலிருந்து அவ்வப்போது பயனர்களின் தரவுகள் அவ்வப்போது கசிந்த வண்ணம் உள்ளன.

இதனால் பேஸ்புக் நிறுவனம் மீது அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த வரிசையில் தற்போது துருக்கி நாட்டில் சுமார் 280,950 பயனர்களின் தரவுகள் இவ்வாறு கசிந்துள்ளன.

இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனத்திற்கு 281,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பயனர் பெயர்கள், பால், பிறந்த திகதி, ஸ்டேட்டஸ், கல்விப்பின்னணி, சமயம், வசிக்கும நகரம் மற்றும் உறவுமுறைகள் தொடர்பான தரவுகள் இதன்போது கசிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்