இந்தியாவை மையப்படுத்தி நோக்கியாவின் அதிரடித்திட்டம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஸ்மார்ட் கைப்பேசி உலகில் கொடிகட்டிப் பறக்கும் நோக்கியா நிறுவனம் தற்போது மற்றுமொரு முயற்சியில் இறங்கியுள்ளது.

இதன்படி இந்தியாவில் உள்ள பின்தங்கிய பகுதிகளுக்கு 4G மொபைல் வலையமைப்பினை வழங்க தீர்மானித்துள்ளது.

இதற்காக இந்தியாவில் உள்ள ரெலிகொம் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றது.

ஏற்கனவே இந்த வருடத்தின் முதல் அரையாண்டுப் பகுதியில் 13 சதவீதத்திற்கும் அதிகமான ஒப்பந்தங்களை தன்வசப்படுத்தியுள்ள நோக்கியா நிறுவனம் தற்போது இதனை மேலும் அதிகரிக்க எண்ணியுள்ளது.

இதன்படி எதிர்வரும் 2022 ஆம் ஆண்டளவில் சுமார் 40,000 கிராமங்களுக்கு 4G வயலையமைப்பு சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் 5G வலையமைப்பு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர் இதனை நடைமுறைப்படுத்த ஆரம்பிக்கவுள்ளதாக இந்தியாவிற்கான நோக்கிய நிறுவனத்தின் தலைமை அதிகாரி சன்ஜே மாலிக் தெரிவித்துள்ளார்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்