டுவிட்டரின் அதிரடி நடவடிக்கை: CEO வெளியிட்ட தகவல்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
35Shares

சமகாலத்தில் சமூகவலைத்தளங்கள் பெருமளவில் அரசியல் பிரச்சாரங்களுக்காக பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

இதனால் சமூகவலைத்தள நிறுவனங்கள் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கவேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.

இதன் காரணமாக டுவிட்டர் நிறுவனம் ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதன்படி எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதி முதல் அரசியல் ரீதியான எந்தவொரு விளம்பரங்களையும் ஏற்றுக்கொள்வதில்லை என முடிவுக்கு வந்துள்ளது.

இந்த தகவலை டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான Jack Dorsey தெரிவித்துள்ளார்.

இதேபோன்ற முடிவினை அண்மையில் பேஸ்புக் நிறுவனமும் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே எதிர்காலத்தில் கட்டணம் செலுத்தப்பட்ட அரசியல் விளம்பரங்கள் எதுவும் பேஸ்புக், டுவிட்டர் தளங்களில் பிரசுரிக்க முடியாது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்