டுவிட்டரிலிருந்து விடைபெற்றார் டெஸ்லா நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

இலத்திரனியல் கார் வடிவமைப்பில் மாத்திரமன்றி விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதிலும் புரட்சியை ஏற்படுத்தி வரும் நிறுவனமாக Tesla திகழ்கின்றது.

இந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக Elon Musk விளங்குகின்றார்.

இவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்திலிருந்து விலகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இறுதியாக தனது டுவிட்டர் பக்கத்தில் "Not sure about good of Twitter" எனும் வாசகத்தை பதிவிட்டுள்ளார்.

எனினும் இவரது டுவிட்டர் பக்கம் நிரந்தமாக நிறுத்தப்படவில்லை (Deactivate) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவர் அடிக்கடி டுவிட்டரில் சர்ச்சைக்குரிய பதிவுகளை பதிவேற்றம் செய்பவர் என்பதுடன் முன்னர் ஒருதடவை இவ்வாறான சம்பவத்திற்காக அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவினால் குற்றம் சுமத்தப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்