இந்தியாவிற்கான கூகுளின் முகாமையாளராக தேர்வு செய்யப்பட்ட புதிய நபர்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

கூகுள் நிறுவனத்தின் வெற்றிக்கு பின்னால் இந்தியாவின் பங்கும் அளப்பெரியதாகும்.

இந்தியாவில் மிகப்பெரிய தொழில்நுட்பச் சந்தை காணப்படுவதே இதற்குரிய காரணமாகும்.

இந்நிலையில் இந்தியாவில் மேலும் தனது இருப்பை மேம்படுத்துவதற்காக புதிய முகாமையாளர் ஒருவரை கூகுள் நியமித்துள்ளது.

இதன்படி சஞ்ஜே குப்தா புதிய நாட்டின் முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், விற்பனை மற்றும் ஏனைய செயல்பாடுகளின் துணைத் தலைவராகவும் செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் முன்னர் ஸ்டார் இந்தியாவினால் நிர்வகிக்கப்பட்டுவரும் வால்ட் டிஸ்னியில் நிர்வாக இயக்குனராக பணியாற்றிறுள்ளதுடன் Hotstar எனும் ஒன்லைன் டிஜிட்டல் தொலைக்காட்சி சேவையினையும் அறிமுகம் செய்வதற்கு காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்