நிறத்தின் அடிப்படையில் அலுவலகத்தில் இனவெறி: மன்னிப்புக் கோரியது பேஸ்புக் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
104Shares

முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் அலுவலகங்களில் இனவெறி காணப்படுவதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.

குறிப்பாக கறுப்பின பெண்கள், ஹிஸ்பானியர்கள் மற்றும் ஆசியாவின் பெண் ஊழியர்களை இவ்வாறான இனவெறியுடன் பார்க்கும் கலாச்சாரம் காணப்பட்டு வந்துள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது தொடர்பாக பேஸ்புக்கில் பணியாற்றும் 12 ஊழியர்கள் தமது கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் குறித்த சம்பவங்களை பகிர்ந்துள்ளனர்.

இதனை அடுத்து பேஸ்புக் நிறுவனம் குறித்த சம்பவங்கள் தொடர்பில் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் மேலும் இடம்பெறாது என்பதை உறுதிப்படுத்துவதுடன், அனைவரும் பணியாற்றக்கூடிய சிறந்த சூழல் உருவாக்கப்படும் எனவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்