வியாபாரத்தினை அதிகரிக்க அலிபாபா கிளவுட் எடுக்கும் அதிரடி நடவடிக்கை

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

மின்வணிகத் துறையில் குறுகிய காலத்தில் பிரபல்யம் அடைந்த நிறுவனமாக அலிபாபா திகழ்கின்றது.

இந்நிறுவனத்தின் நிறுவுனரும், பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் இருந்த ஜக் மா அண்மையில் ஓய்வு பெற்றிருந்தார்.

இந்நிலையில் அலிபாபா நிறுவனம் தனது கிளவுட் உற்பத்திகளின் விற்பனையை மேலும் அதிகரிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.

இதற்காக இந்தியாவின் ZNet நிறுவனத்துடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளது.

ZNet ஆனது 50 கிளைகள் மற்றும் 50 சேவை நிலையங்களைக் கொண்ட Rashi Peripherals Pvt Ltd நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் ஒரு உப நிறுவனமாகும்.

ZNet ஆனது கிளவுட் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் மற்றும் முகாமைத்துவம் செய்யும் சேவையை வழங்கிவருகின்றது.

இந்நிறுவனமானது அலிபாபா கிளவுட் பயனர்களுக்கு Infrastructure as a Service (IaaS), Content Delivery Network (CDN), Video on demand (VOD), SMS, Big Data, Mail services உட்பட மேலும் பல வசதிகளை பெறுவதற்கான உதவிகளை வழங்கவுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்