ஆப்பிள் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரியின் கடந்த வருட வருமானம் எவ்வளவு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
167Shares

ஆப்பிள் நிறுவனத்தினை உருவாக்கியவரும், முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் திகழ்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த 2011 ஆம் ஆண்டு இறந்ததன் பின்னர் இன்று வரை டிம் குக் அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றிவருகின்றார்.

கூகுள் போன்ற முன்னணி இணைய நிறுவனங்களுக்கு நிகராக காணப்படும் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கும் அதிகமான தொகை ஊதியமாக வழங்கப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த வருடம் டிம் குக் பெற்ற ஊதியத்தொகை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி 2019 ஆம் ஆண்டில் அவரது வருடாந்த ஊதியம் மாத்திரம் 3 மில்லியன் டொலர்களாக காணப்பட்டுள்ளது.

எனினும் இதர கொடுப்பனவுகளுடன் சேர்த்து மொத்த வருமானமானது 125 மில்லியன் டொலர்கள் ஆகும்.

எனினும் அவரது போனஸ் தொகையானது 2018 ஆம் ஆண்டில் 12 மில்லியன் டொலர்களாக இருந்தபோதிலும் 2019 ஆம் ஆண்டில் 7.67 மில்லியன் டொலர்களாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்