ஆப்பிள் நிறுவனம் விடுக்கும் புதிய சவால்: ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாரா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
164Shares

ஆப்பிள் நிறுவனம் வழமையாக வருடம் தோறும் புகைப்படப் போட்டியினை நடாத்தி வருவது தெரிந்ததே.

இந்நிலையில் இவ் வருடம் இப் போட்டியை சற்று வித்தியாசமாக நடாத்தவுள்ளது.

இதன்படி பயனர்களை Night Mode புகைப்படங்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன் இப் புகைப்படங்கள் அனைத்தும் iPhone 11, iPhone 11 Pro மற்றும் iPhone 11 Pro Max என்பனவற்றின் உதவியுடன் எடுக்கப்பட வேண்டும்.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் போட்டியானது எதிர்வரும் 28 ஆம் திகதி நிறைவடைகின்றது.

இதன்மூலம் சமர்ப்பிக்கப்படும் சிறந்த புகைப்படங்களில் ஐந்து புகைப்படங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் பெயர்கள் ஆப்பிள் ஸ்டோர், பில்போட் உட்பட மேலும் பல இடங்ளில் காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்