ஆப்பிளின் முதலாம் காலாண்டிற்கான வருமானம்: எத்தனை பில்லியன் டொலர்கள் தெரியுமா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

2020 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டிற்கான தனது வருமானம் தொடர்பில் ஆப்பிள் நிறுவனம் உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதன்படி 91.8 பில்லியன் டொலர்களை அது ஈட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் ஈட்டும் அதிகூடிய தொகையாகவும் பதிவாகியுள்ளது.

கடந்த வருடத்தின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 9 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

இந்த மொத்த வருமானத்தில் இலாபமாக 22.2 பில்லியன் டொலர்கள் காணப்படுகின்றதாகவும் ஆப்பிள் தெரிவித்துள்ளது.

இப்படியிருக்கையில் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் வருமானம் 63 பில்லியன் டொலர்கள் தொடக்கம் 67 பில்லியன் டொலர்கள் வரை இருக்கும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்