கொரோனா வைரஸ் தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கும், விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கும் பல்வேறு நிறுவனங்கள் தமது பங்களிப்பினை வழங்கி வருகின்றன.

இந்த வரிசையில் பேஸ்புக் நிறுவனமும் இணைந்துள்ளது.

அதாவது குறித்த வைரஸ் தொடர்பான தகவல்கள், அவற்றிலிருந்து பாதுகாப்பினை பெறுவது தொடர்பான தகவல்கள் உட்பட பல்வேறு தகவல்களை பேஸ்புக்கின் ஊடாக மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளது.

அது தவிர கொரோனா வைரஸ் தொடர்பில் பரப்பப்படும் போலியான தகவல்கள் தொடர்பிலான விழிப்புணர்வினை ஏற்படுத்துவது தொடர்பிலும் பேஸ்புக் நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மக்களை அச்சம் கொள்ள வைக்கும் போலியான தகவல்கள் பேஸ்புக் தளத்தின் ஊடாக பகிரப்படின் அவற்றினை நீக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்