தனது துணை நிறுவனம் ஒன்றினை மூடும் அவாஸ்ட் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

முன்னணி ஆன்டி வைரஸ் மென்பொருளை அறிமுகம் செய்த நிறுவனங்களுள் ஒன்றாக திகழும் அவாஸ்ட் தனது பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி விற்பனை செய்ததாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.

அதாவது அமேஷான், கூகுள், நெட்பிளிக்ஸ் மற்றும் வால்மார்ட் உட்பட 150-ற்கும் மேற்பட்ட இணையத்தளங்களில் பயனர்களின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை விற்பனை செய்திருந்தது.

இதன் துணை நிறுவனமான Jumpshot நிறுவனத்தின் ஊடாகவே இவ் வியாபாரம் இடம்பெற்றுள்ளமையும் வெளியாகியிருந்தது.

இதனை அடுத்து Jumpshot நிறுவனத்தினை அவாஸ்ட் மூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்த Jumpshot நிறுவனம் அவாஸ்ட் நிறுவனத்தின் 13 சதவீதமான பங்குகளை கொண்டிருந்தது.

இதனால் அவாஸ்ட் நிறுவனத்தின் மதிப்பானது 15 மில்லியன் டொலர்கள் தொடக்கம் 25 மில்லியன் டொலர்கள் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்