செயற்கைக் கோள்களை ஏவுவதற்கு இந்தியாவிற்கு கைகொடுக்கவுள்ள நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

விண்வெளி ஆய்வில் இந்தியா உலகள அளவில் பாரிய புரட்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.

இதற்காக அடுத்தடுத்து செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு ஏவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.

இந்நிலையில் எதிர்காலத்தில் புதிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு Kleos Space எனும் நிறுவனம் இந்தியாவிற்கு கைகொடுக்கவுள்ளது.

இந்நிறுவனமானது ஐரோப்பாவின் Luxembourg இனை தளமாகக் கொண்டு செயற்பட்டுவருகின்றது.

எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி KSM எனும் செயற்கைக்கோளினை ஸ்ரீகரிகோட்டாவில் இருந்து இந்தியா ஏவவுள்ளது.

இப் பணியில் Kleos Space நிறுவனமும் ஈடுபடுவதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இச் செயற்கைக்கோளினை கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணில் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் Kleos Space தொடர்புபடுவதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்காமையினால் பிற்போடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்